Saturday, February 7, 2026
Homeஜனாதிபதி - வடக்கு, கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையில் இன்று(15) கலந்துரையாடல்

ஜனாதிபதி – வடக்கு, கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையில் இன்று(15) கலந்துரையாடல்

Colombo (News 1st) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையிலான மற்றுமொரு கலந்துரையாடல் கொழும்பில் இன்று(15) மாலை நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று(15) மாலை 5.30க்கு இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர், பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன் தெரிவித்தார்.

அதிகாரப் பகிர்வு, வடக்கில் காணி பிரச்சினை, தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் கூறினார்.

ஜனாதிபதி மற்றும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதி வரையில் 05 கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular