யாசகர் ஒருவர் சடலமாக மீட்பு

Colombo (News 1st) வவுனியா நகரின் வர்த்தக நிலையமொன்றின் முன்பாக ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இன்று(15) அதிகாலை பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய பொலிஸாரினால்  சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 42 வயதான நாவலப்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர் எனவும் குறித்த பகுதியில் யாசகத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles