புரட்சிப்பாடகர் தேனிசை செல்லப்பா காலமானார்

ஈழத்தமிழர்களின் விடுதலைக் கனலை மூட்டிய புரட்சிப் பாடகர், பாசறைப் பாணர். தேனிசை செல்லப்பா இன்று செவ்வாய்க்கிழமை தனது 85 ஆவது வயதில் காலமானார்.

ஈழத் தமிழர்களின் விடுதலை உணர்வையும், போராட்டக் குணத்தையும் தனது கம்பீரமான குரலால் உலகெங்கும் எதிரொலிக்கச் செய்தவர் ‘தேனிசை’ செல்லப்பா.

அவரது மறைவு ஒட்டுமொத்த தமிழினத்திற்கும், இசை ஆர்வலர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

அவர் வெறும் பாடகர் மட்டுமல்ல் ஈழத்தின் போர்க்கால வரலாற்றில் மக்களின் மனங்களில் நம்பிக்கையையும், விடுதலை வேட்கையையும் விதைத்த ஒரு குரல். அவரது இசைப் பயணம் தமிழர்களின் வரலாற்றில் என்றும் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது.

துப்பாக்கிக் குண்டுகளை விட, அவரது பாடல்கள் மக்களின் மனங்களில் விடுதலைக் கனலை மூட்டின. போராட்டக் களங்களில் இருந்தவர்களுக்கு அவர் பாடல்கள் ஒரு பெரும் உந்துசக்தியாக இருந்தன.

துயரங்களையும், விடுதலையின் அவசியத்தையும் எளிய மக்களுக்கும் புரியும் வகையில் பாடி, கலை மூலம் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்.

அவர் பாடிய ஒவ்வொரு பாடலும் வரலாற்றின் பக்கங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தலைமுறைகள் கடந்தும் அவரது குரல் ஒலிக்கவே செய்யும்.

தேனிசை செல்லப்பாவின் மறைவுக்கு பலரும் தமது இரங்கல்களை வெளியிட்டுவருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles