அமரர் அமரசிங்கம் சிவகுமார்

பிறப்பு17 AUG 1964, இறப்பு19 JUN 2018

வயது 53

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) கனடா, Canada

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரர் அமரசிங்கம் சிவகுமார் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 24-06-2023.

எங்கள் இதயம் என்னும் கோவிலில் வீற்றிருக்கும்
அன்புத்தெய்வமே! ஆசைத்தந்தையே!!
ஆண்டுகள் போனாலும்
அழியவில்லை உங்கள் நினைவுகள்
இன்னமும் தீராத ஏக்கத்துடன் எம் இதயம் துடிக்கின்றது.
”அப்பா” என்றழைக்க கனவிலும் நினைவிலும்
யாருமற்று தவிக்கின்றோம்.

இறப்பால் இறைவன் உங்களை பிரித்தாலும்
நினைவுகள் எனும் உயிருடன் எம் இதயங்களில்
வாழ்ந்து கொண்டும் வழிகாட்டியாக
வாழ வைக்கும் எம் தந்தையே!

எவர் என்று முகம் பாராமல் பிறர் துன்பம் என் துன்பம்
பிறர் கண்ணீர் என் கண்ணீர் என உதவி கேட்போருக்கு
இல்லை என்று சொல்லாமல்
கர்ணனாய் வலம் வந்த எம் தந்தையே!

எத்தனை ஆண்டுகள் வந்தாலும் அகலாது
உங்கள் பிரிவின் வலி
ஆறாது உங்களின் இழப்பின் தவிப்பு.

என்றென்றும் உங்கள் நினைவுகளை சுமந்து நிற்கும்
அன்பு மனைவி, பிள்ளைகள், குடும்பத்தினர்.

தகவல்: மனைவி, பிள்ளைகள், குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles