யாழ்ப்பாணத்தில் பழக்கடை வியாபாரி கடத்தல்; நால்வர் கைது

Colombo (News 1st) யாழ்ப்பாணத்தில் பழக்கடை வியாபாரி ஒருவரை கடத்திச்சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பழக்கடை அமைந்துள்ள பகுதியில் நேற்றைய தினம் (30)  ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து, இந்த கடத்தல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடத்தி, தாக்கப்பட்டதாகக் கூறப்படும் பழக்கடை வியாபாரியின் முறைப்பாட்டிற்கு அமைய, யாழ்ப்பாணம் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்,  மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இந்த நிலையில், நல்லூர் – அரசடி பகுதியை சேர்ந்த 18, 20, 23 மற்றும் 24 வயதான நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் மூன்று சந்தேகநபர்களை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles