இராகலை தோட்ட குடியிருப்பில் தீ

Colombo (News 1st) இராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இராகலை கீழ் பிரிவு தோட்டக் குடியிருப்பு தொகுதியில் இன்று(05) காலை தீப்பரவல் ஏற்பட்டிருந்தது.

இந்த குடியிருப்புத் தொகுதி 20 குடியிருப்புகள் அடங்கிய இரு பகுதிகளை கொண்டதாகும்.

06 ஆம் இலக்க தொடர் வீட்டு லயன் குடியிருப்பு தொகுதியில் இன்று(05) காலை 10.30 அளவில் தீப்பரவல் ஏற்பட்டதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

தீப்பரவல் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்து காரணமாக 20 குடியிருப்புகள் பாதிக்கப்பட்டுள்ள போதிலும் பாரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை என்பதுடன், இராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles