பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்: சாரதி பலி

Colombo (News 1st) உமா ஓயா செயற்றிட்ட ஊழியர்களை ஏற்றிச்சென்ற பஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் பஸ்ஸின் சாரதி உயிரிழந்துள்ளார்.

கரதகொல்ல பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு செல்லும் வீதியின் உமா ஓயா திட்ட அலுவலகத்திற்கு அருகில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இரவு நேர காவல் பணி முடிந்து திரும்பிக் கொண்டிருந்த ஊழியர்களே விபத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

இன்று(18) காலை 7 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் மேலும் 07 பேர் காயமடைந்துள்ளதுடன் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தில் ரந்தெனிய பகுதியைச் சேர்ந்த 71 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles