வறட்சியினால் சிறுபோக செய்கை பெரிதும் பாதிக்கப்பட்ட மாவட்டமாக குருநாகல் பதிவு

Colombo (News 1st) கடுமையான வறட்சியினால் சிறுபோக செய்கை பெரிதும் பாதிக்கப்பட்ட மாவட்டமாக குருநாகல் பதிவாகியுள்ளது.

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயம் வௌிக்கொணரப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் பயிர்செய்கைக்கு ஏற்பட்டுள்ள அழிவுகள் தொடர்பில் விவசாய காப்புறுதி சபை மதிப்பீடுகளை ஆரம்பித்துள்ளது.

இதற்கிணங்க, தற்போது வரை முன்னெடுக்கப்பட்ட மதிப்பீடுகளின் பிரகாரம், அதிக அழிவுகள் குருநாகல் மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளது.

இது தொடர்பான விரிவான அறிக்கை, எதிர்வரும் வாரத்தில் அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கையளிக்கப்படவுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles