Monday, February 9, 2026
Homeஐ.ம.சக்தியின் ஹர்ஷ டி சில்வா அடுத்தாண்டு வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பார் - சஜித்

ஐ.ம.சக்தியின் ஹர்ஷ டி சில்வா அடுத்தாண்டு வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பார் – சஜித்

அடுத்தாண்டு வரவு செலவுத் திட்டத்தை ஹர்ஷ டி சில்வா நாடாளுமன்றத்தில் சமர்பிப்பார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் வரவு செலவுத் திட்டம் மீதான நாடாளுமன்ற விவாதம் இன்று (13) இடம்பெற்று வருகின்றது.

இதில் அடுத்த வரவு செலவுத் திட்டத்தை யார் முன்வைப்பது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, அதனை முன்வைப்பர் என்றும் அதில் தனது கொள்கையை வெளிப்படுத்துவர் என்றும் கூறியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular