Sunday, February 8, 2026
Homeஅரசியல் கைதிகளுக்காக புலம்பெயர் அமைப்புக்கள் குரல் கொடுக்க வேண்டும்! - கோமகன்

அரசியல் கைதிகளுக்காக புலம்பெயர் அமைப்புக்கள் குரல் கொடுக்க வேண்டும்! – கோமகன்

”அரசியல் கைதிகளின் விடுதலைக்கு அனைத்து தரப்பினரும் குரல் கொடுக்கவேண்டும்” என ”குரலற்றவர்களின் குரல்” அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்றைய தினம் (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும். அதற்காக புலம்பெயர் அமைப்புகள் தொடர்ச்சியாக குரல் கொடுக்க வேண்டும்.

அத்துடன் ஜனாதிபதியை சந்திக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச வேண்டும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular