Friday, February 6, 2026
Homeவருமான அனுமதிப்பத்திரத்தை கொண்டிராத வாகனங்களின் பதிவுகளை நீக்க நடவடிக்கை

வருமான அனுமதிப்பத்திரத்தை கொண்டிராத வாகனங்களின் பதிவுகளை நீக்க நடவடிக்கை

Colombo (News 1st) வருமான அனுமதிப்பத்திரத்தை கொண்டிராத வாகனங்கள் தொடர்பான தகவல்களை திரட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

05 வருடங்களுக்கு அதிகக் காலம் வருமான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளாத வாகனங்கள் தொடர்பில் அனைத்து மாகாண சபைகளிடமிருந்தும் தகவல்களை கோரியுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்தார். 

அந்த தரவுகளை அடிப்படையாகக் கொண்டு வாகன உரிமையாளர்களுக்கு அது தொடர்பில் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் கூறினார். 

வருமான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளாத வாகனங்களின் பதிவுகளை தமது திணைக்களத்தின் தரவுக் கட்டமைப்பிலிருந்து நீக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular