Tuesday, February 3, 2026
Homeபாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை - ஜனவரி 4 உயர்தரப்பரீட்சை ஆரம்பம்

பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை – ஜனவரி 4 உயர்தரப்பரீட்சை ஆரம்பம்

2023 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட விடுமுறை இன்று வழங்கப்பட்டது.

மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

பாடசாலை மாணவர்களுக்கு 39 நாட்கள் நீண்ட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 

இந்த பாடசாலை விடுமுறை காலப்பகுதியில் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை 2024 ஜனவரி 04 ஆம் திகதி முதல் ஜனவரி 31 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. 

2024 புதிய கல்வியாண்டுக்கான கற்றல் நடவடிக்கைகள் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular