Saturday, February 7, 2026
Homeகோழிச் சண்டையால் விபரீதம்: கந்தரோடையில் 37 வயதான நபர் கொலை

கோழிச் சண்டையால் விபரீதம்: கந்தரோடையில் 37 வயதான நபர் கொலை

Colombo (News 1st) யாழ்ப்பாணம் – சுன்னாகம், கந்தரோடை பகுதியில் நேற்று (30) இடம்பெற்ற கொலை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொலை இடம்பெற்ற பகுதியில் மல்லாகம் நீதவான், சுன்னாகம் பொலிஸார், தடயவியல் பொலிஸார் ஆகியோர் இன்று விசாரணைகளை மேற்கொண்டனர்.

கந்தரோடை பகுதியில் நேற்று  இருவரிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது இந்த கொலை இடம்பெற்றுள்ளது.

கந்தரோடையை சேர்ந்த 37 வயதான நபர் கொல்லப்பட்டுள்ளார்.

உறவினர்களுக்கிடையில் ஏற்பட்ட கோழிச் சண்டையினால் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. வாய்த்தர்க்கம் முற்றி கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.

கொலை தொடர்பில் 54 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடம் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular