Super Bowl கால்பந்தாட்ட வெற்றி பேரணி மீது துப்பாக்கிச்சூடு : ஒருவர் உயிரிழப்பு

Colombo (News 1st) அமெரிக்காவின் Kansas மாகாணத்தில் நடைபெற்ற பேரணியொன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 21 பேர் காயமடைந்துள்ளனர்.

அன்மையில்  நடைபெற்ற Super Bowl கால்பந்தாட்ட வெற்றியைக் கொண்டாடும் வகையில் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

காயமடைந்தவர்களில் 9 சிறுவர்கள் அடங்குவதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles