ஜப்பான் பொருளாதாரம் திடீர் சரிவு: மூன்றாம் இடத்தை ஜெர்மனியிடம் பறிகொடுத்தது

Colombo (News 1st) உலகின் மூன்றாவது பொருளாதாரமாக இருந்து வந்த ஜப்பான் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால், உலகின் மூன்றாவது பொருளாதாரமாக ஜெர்மனி உருவெடுத்துள்ளது.

உலக பொருளாதாரத்தில் உள்நாட்டு மொத்த உற்பத்தி (Gross Domestic Product) அடிப்படையில், ஜப்பான் வல்லரசு நாடுகளான அமெரிக்கா, சீனா, ஆகிய நாடுகளுக்கு பிறகு மூன்றாம் இடத்தில் இருந்து வந்தது.

ஆனால், கடந்த சில வருடங்களாக பல சிக்கல்களால் ஜப்பானின் பொருளாதாரம் சரிவை சந்தித்து வருகிறது.

தற்போது, ஜப்பானில் இருந்து வெளிவந்திருக்கும் அதிகாரபூர்வ தகவல்களின்படி, ஜப்பானிய பொருளாதாரம், கடந்த ஆண்டை விட 1.9 % அதிகரித்துள்ளது. இருந்தும், இதுவரை தக்க வைத்திருந்த மூன்றாம் இடத்தில் இருந்து நகர்ந்து நான்காவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

இதன் மூலம், ஜெர்மனி உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது.

அதிகாரபூர்வ தகவல்களின் அடிப்படையில், அமெரிக்க டொலர் மதிப்பில் 2023-க்கான ஜப்பானிய GDP $4.2 டிரில்லியன் எனும் அளவில் உள்ளது. $4.5 டிரில்லியன் எனும் மதிப்பில் ஜெர்மனி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

ஒரு தசாப்தத்திற்கு முன்னதாக இரண்டாவது பொருளாதார நாடாக இருந்த ஜப்பான், அந்த இடத்தை சீனாவிடம் பறிகொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய இரு நாட்டு பொருளாதாரமும் ஏற்றுமதியை சார்ந்தவை.

ஜப்பானில் அண்மைக்காலமாக மக்கள் தொகை குறைவதாலும் வயோதிபர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதாலும் தம்பதியர் குழந்தைகளை பெற்றுக்கொள்ள விரும்பாததாலும் அனைத்து துறைகளிலும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இதனால் உள்நாட்டு உற்பத்தி பெரிதும் குறைந்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles