காதல் காமெடியுடன் மார்ச் 29 OTT-யில் வெளியாகும் ‘பிரேமலு’..!

ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவான மலையாள மொழிப்படம் ‘பிரேமலு’. காதல்,காமெடி நிறைந்த இப்படத்தை பிரபல இயக்குனர் கிரிஷ் இயக்கி உள்ளார். இதில் மமிதா பைஜு, நஸ்லேன் நடித்துள்ளனர். விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார்.

இந்த படம் கடந்த பிப்ரவரி 9- ந் தேதி வெளியானது. கேரளாவில் பெரும் வெற்றி பெற்ற இந்த படம் பிப்.15- ந் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. கடந்த மார்ச் 8 -மகளிர் தினத்தில் தெலுங்கில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டது.

தமிழில் மொழிபெயர்ப்பு செய்து இன்று வெளியாகியுள்ளது பிரேமலு படம். இந்நிலையில் உலக அளவில் இந்த படம் ‘பாக்ஸ் ஆபீஸ்’ வசூல் ரூ.100 கோடிக்கும் மேல் தாண்டியது. மலையாளத்தில் குறும்படமாக வெளியான ‘யூத்புல் லவ் ஸ்டோரி,’ தற்போது தெலுங்கிலும் ‘டப்’ செய்யப்பட்டு மக்களிடம் வரவேற்பு பெற்று வருகிறது.

இந்த காதல் கதையை பார்த்து இளைஞர்கள் காதல் வயப்படுகின்றனர். இதன் மூலம் பிரேமலு படம் எதிர்பார்த்ததை விட அதிகமாக வசூல் செய்து வருகிறது. நாயகி மமிதா பைஜு தற்போது பேசும் பொருளாகி விட்டார்.

இத்தனை அம்சங்களுடன் ‘பிரேமலு’ படம் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங்கிற்கு தயாராக உள்ளது. பிரபல OTT தளமான டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் பிரேமலுவின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை பெற்றுள்ளது. மார்ச் 29-ந் தேதி முதல் OTT-யில் இப்படம் வெளியீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles