அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் அதிகரிப்பு

எரிபொருள் விலை அதிகரிப்பினைத் தொடர்ந்து, சந்தையில் தற்போது அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பருப்பு, நெத்தலி, தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளதாக புறக்கோட்டை மொத்த வியாபாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, சந்தையில் நுகர்வோர் அநீதிக்குள்ளாக்கப்படுவதைத் தடுப்பதற்காக நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்புகள் மற்றும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

சில வர்த்தகர்கள் அத்தியாவசிய உணவுப் பொருட்களை மறைத்து வைப்பதன் மூலம் சந்தையில் செயற்கைத் தட்டுப்பாட்டை உருவாக்கவும், பொருட்களின் விலைகளை நியாயமற்ற முறையில் உயர்த்தவும் முற்பட்டுள்ளதாக அந்த அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.

திருவிழாக் காலங்களில் சந்தையில் இடம்பெறக்கூடிய முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கில், அதிகாரசபையின் அனைத்து விசாரணை அதிகாரிகளையும் வார இறுதி நாட்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்களிலும் தொடர்ச்சியாகப் பணியில் ஈடுபடுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோருக்கு இழைக்கப்படும் ஏதேனும் அநீதி அல்லது சந்தை முறைகேடுகள் குறித்து 1977 என்ற குறுகிய இலக்கத்தின் ஊடாக முறைப்பாடுகளைத் தெரிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles