Sunday, February 8, 2026
Home15 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது..!

15 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது..!

இந்தியா – நாகபட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் 15 பேர் இன்று அதிகாலை யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர் .

குறித்த மீனவர்கள் எல்லை தாண்டி வந்து சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட வேளை இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் நீரியல்வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். பின்னர் நீரியல்வள திணைக்களம், குறித்த மீனவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

RELATED ARTICLES

Most Popular