மேலும் குறைகிறது மத்திய வங்கி வட்டி வீதங்கள்..!

இலங்கை மத்திய வங்கி தனது கொள்கை வட்டி வீதத்தை மேலும் குறைக்க தீர்மானித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபை நேற்று (25) நடைபெற்ற கூட்டத்தில் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

இதன்படி, துணைநில் வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் (SLFR) ஆகியவற்றை முறையே 50 அடிப்படை புள்ளிகளால் 8.5 சதவீதம் மற்றும் 9.5 சதவீதமாகக் குறைக்க நாணயக் கொள்கைச் சபை தீர்மானித்துள்ளது.

இதன் பலன்கள் வணிகங்கள் மற்றும் குடும்பங்களுக்கு வழங்கப்படுவதை உறுதிசெய்ய அனைத்து நிதி நிறுவனங்களும் சந்தைக் கடன் வட்டி வீதங்களை குறைக்க விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தை நாணயக் கொள்கை சபை வலியுறுத்தியுள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles