Monday, February 9, 2026
Homeயாழில் போதைப்பொருளுடன் இளைஞன் கைது..!

யாழில் போதைப்பொருளுடன் இளைஞன் கைது..!

யாழ்ப்பாணப் பிரதேசத்தில் போதைப்பொருளை விற்பனை செய்த கடத்தல்காரர்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் கொக்குவில் மேற்குப் பகுதியில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களை வைத்திருந்த 20 வயதுடைய இளைஞன் கைதுசெய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படை யாழ்ப்பாண முகாம் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பேரிலேயே இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Most Popular