கனமழை : வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை..!

கனமழைக்கு வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, மேற்கு, சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களுக்கும், காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கும் இது தொடர்பான அறிவிப்பு அமுலுக்கு வருமெனவும், தென்மேற்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதனால் தற்போதைய மழை மற்றும் காற்றின் நிலை மேலும் அதிகரிக்குமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு அறிவித்தல் விடுத்துள்ளது.

சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

 

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles