திருமண படங்களை Restore செய்த ஹர்திக் மனைவி : விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி..!

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்திக் பாண்டியா. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடாஷா ஸ்டான்கோவிக் என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார். ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா ஸ்டான்கோவிக் தம்பதிக்கு குழந்தை உள்ளது.

ஹர்திக் – நடாஷா ஜோடி பிரிந்துவிட்டதாக கடந்த சில வாரங்களாக தகவல் வெளியானது. முன்னதாக நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் ஒரு போட்டியிலும் நடாஷா பங்கேற்காதது, இன்ஸ்டாவில் இருந்து தனது திருமண புகைப்படங்களை நீக்கியது உள்ளிட்டவை இருவரும் விவாகரத்து செய்ய உள்ளனர் என்ற தகவலை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்தது.

இந்த நிலையில், நடாஷா ஸ்டான்கோவிக் தனது இன்ஸ்டாவில் இருந்து நீக்கிய படங்களை தற்போது ரிஸ்டோர் செய்துள்ளார். நடாஷா இன்ஸ்டா பக்கத்தில் அவர் ஹர்திக் பாண்டியாவை திருமணம் செய்த போது எடுத்துக் கொண்ட படங்கள் மீண்டும் இடம்பெற்றுள்ளது.

அந்த வகையில், நடாஷா தனது கணவரை பிரியவில்லை என்பதை சூசகமாக தெரிவித்துள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். மேலும், இருவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles