இது எனக்கே ஆச்சரியமாத் தான் இருக்கு : ஜோதிகா..!

25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாலிவுட் சென்றிருக்கும் ஜோதிகா அங்கு பிசியாகி வருகிறார். இதனால் மும்பையில் தங்கிவிட்டார்.

25 ஆண்டுகள் கழித்து பாலிவுட் சென்றது தனக்கே ஆச்சரியமாக இருப்பதாக ஜோதிகா தெரிவித்துள்ளார்.

1998ம் ஆண்டு வெளியான டோலி சஜா கே ரக்னா இந்தி படம் மூலம் நடிகையானவர் ஜோதிகா. அதன் பிறகு அவர் கோலிவுட்டில் செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில் 25 ஆண்டுகள் கழித்து சைத்தான் படம் மூலம் மீண்டும் பாலிவுட் சென்றார்.

அஜய் தேவ்கன், மாதவன் உள்ளிட்டோர் நடித்திருந்த சைத்தான் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. சைத்தானை அடுத்து ஜோதிகா நடிப்பில் வெளியான ஸ்ரீகாந்த் படமும் ஹிட்டாகிவிட்டது. ஸ்ரீகாந்த் படத்தில் ராஜ்குமார் ராவ் ஹீரோவாக நடித்திருந்தார்.

பாலிவுட்டுக்கு மீண்டும் சென்றிருப்பது பற்றி ஜோதிகா கூறியிருப்பதாவது,

இந்த கம்பேக் எனக்கே ஆச்சரியமாக உள்ளது. 25 ஆண்டுகளாக சத்தமே இல்லை. இந்நிலையில் திடீரென்று இரண்டு படங்கள் வெளியாகி அனைவரையும் பேச வைத்துவிட்டது. வடக்கு, தெற்கு என்கிற பிரிவு எல்லாம் தற்போது இல்லை. எல்லாவற்றையும் ஒரே மாதிரியாக பார்க்கிறார்கள் ரசிகர்கள் என்றார்.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles