Tuesday, February 10, 2026
spot_img
Homeநுவரெலியாவில் விசேட போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கை..!

நுவரெலியாவில் விசேட போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கை..!

நாட்டில் மீண்டும் புதிய திட்டத்துடன் விசேட சுற்றிவளைப்புக்கள் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான ‘யுக்திய’ என்னும் பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் நுவரெலியா மஹிந்த மாவத்த பகுதியில் நுவரெலியா பொலிஸார் மற்றும் இராணுவத்தினருடன் இணைந்து குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை இன்றையதினம் (04) அதிகாலை 5 மணி முதல் முன்னெடுக்கப்பட்டது.

மேலும் நுவரெலியா நகரில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றவர்கள் தொடர்பாகவும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், பிரதான நகரில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடுபவர்களையும் அவர்கள் கொண்டு செல்லும் பொதிகளையும் அடிக்கடி பரிசோதனை செய்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

Most Popular