ஷேக் முஜிபுர் ரஹ்மான் சிலையை சேதப்படுத்தியதற்கு நீதி வேண்டும் : ஷேக் ஹசீனா..!

ஷேக் ஹசீனா இந்தியா வந்த பிறகு முதன்முறையாக பங்களாதேஷ் வன்முறை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். ஷேக் ஹசீனா பங்களாதேஷ் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும்.

பங்களாதேஷின் தேசிய தந்தையான எனது தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் சிலையை சேதப்படுத்தியதற்கு நீதி வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக ஷேக் ஹசீனா வேறு வழியின்றி தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் இராணுவ உதவியுடன் இந்தியா வந்தடைந்தார்.

இதற்கிடையில் ஷேக் ஹசீனா மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles