நுவரெலியாவில் போதைப்பொருளுடன் 30 பேர் கைது…!

நுவரெலியா – கிரக்கரி வாவிக் கரையிலுள்ள விடுதியொன்றில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த 30 பேர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலொன்றுக்கமைய, நேற்று மாலை காவல்துறையினரால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின்போது இவர்கள் கைதாகியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இதன்போது கஞ்சா, ஐஸ், குஷ் ரக போதைப்பொருள், போதைப்பொருள் மாத்திரைகள் மற்றும் சட்டவிரோத சிகரெட்டுக்கள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

கைதான சந்தேக நபர்கள் 20 முதல் 38 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் அனைவரும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் நுவரெலியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்களை இன்று நுவரெலியா நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளதாக நுவரெலியா காவல்துறை தெரிவித்துள்ளது.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles