Monday, February 2, 2026
HomeMain NewsMiddle Eastலெபனான் மீது இஸ்ரேல் வான் வழித் தாக்குதல்: 52 பேர் உயிரிழப்பு

லெபனான் மீது இஸ்ரேல் வான் வழித் தாக்குதல்: 52 பேர் உயிரிழப்பு

லெபனானின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் 52 பேர் உயிரிழந்துள்ளனர்.

பால்பெக் நகரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில்ட தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதல் காரணமா மேலும் 72 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கிழக்கு லெபனானில், இஸ்ரேலியப் படைகள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றன. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது.

லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் ஹமாசுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இஸ்ரேலும் பதில் தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றது.

இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் காரணமாக இதுவரை 43 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular