யாழ்ப்பாணம் – சுண்டிக்குளம் கடற்பரப்பில் இன்று அதிகாலை அத்துமீறிக் கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 18 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்போது, மீன்பிடி படகொன்றையும் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்தார்.

கைதான இந்திய மீனவர்கள் அனைவரும் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு அழைத்துவரப்பட்டு, மேலதிக விசாரணைக்காக மயிலிட்டி கடற்றொழில் பரிசோதகர் காரியாலயத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here