Monday, February 2, 2026
HomeMain NewsSri Lankaஇராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்!

இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்!

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தியினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய இந்த விசாரணை முன்னெடுக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி பிரவேசித்து, தமது கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததுடன், தம்மை அச்சுறுத்தியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிராக வைத்தியர் த. சத்தியமூர்த்தி யாழ்ப்பாணம் காவல்துறையில் முறைப்பாடளித்துள்ளார்.

இதற்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular