Monday, February 2, 2026
HomeMain NewsSri Lankaகொழும்பு துறைமுக முனைய அபிவிருத்தி திட்டத்துக்கான நிதியுதவி கோரிக்கையை மீளப் பெற்ற அதானி குழுமம்...!

கொழும்பு துறைமுக முனைய அபிவிருத்தி திட்டத்துக்கான நிதியுதவி கோரிக்கையை மீளப் பெற்ற அதானி குழுமம்…!

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய அபிவிருத்தி திட்டத்துக்காக அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திடம் முன்வைத்த நிதியுதவிக்கான கோரிக்கையை இந்தியாவின் அதானி குழுமம் மீளப் பெற்றுள்ளது.

அதானி குழுமத்தின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படும் கொழும்பு துறைமுக மேற்கு முனைய அபிவிருத்தி திட்டத்திற்கு, அந்த குழுமத்தின் கோரிக்கைக்கு அமைய 553 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்குவதாக அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி கூட்டுத்தாபனம் கடந்த ஆண்டு அறிவித்திருந்தது.

இந்தநிலையில், குறித்த கோரிக்கையை அதானி குழுமம் மீளப் பெற்றுள்ளது.

அதற்கமைய, கொழும்பு மேற்கு முனையத் திட்டத்துக்காக உள் நிதி திரட்டல்கள் மூலம் நிதியளிப்பதாக அதானி குழுமம் அறிவித்துள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular