சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் மேலும் தாமதம்!

நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் கடந்த ஜூன் மாதம் ஆராய்ச்சிக்காக சர்வதேச விண்வெளி மையத்திற்கு போயிங் ஸ்டார் லைனர் விண்கலத்தில் சென்றனர்.

விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் இருவரும் பல மாதமாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி உள்ளனர்.

இருவரும் அடுத்த ஆண்டு பிப்ரவ்ரி மாதம் பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சுனிதா வில்லியம்ஸ் , வில் மோர் ஆகிய இருவரும் பூமிக்கு திரும்புவதில் மேலும் தாமதம் ஏற்படும் என நாசா தெரிவித்துள்ளது.

அடுத்தாண்டு மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில் மோர் ஆகியோர் பூமிக்கு திரும்புவார்கள் என நாசா தெரிவித்துள்ளது.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles