கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள கடுமையான காட்டுத்தீ… இருவர் பரிதாபமாக உயிரிழப்பு!

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் கடுமையான காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.

இந்த காட்டுத்தீ லாஸ் ஏஞ்சல்சின் மலைப்பகுதிகளுக்கு பரவியதால் அங்கு கடும் புகைமூட்டம் நிலவி வருகிறது.

காட்டுத் தீயில் சிக்கி ஏராளமான வீடுகள், வாகனங்கள் சேதமடைந்த நிலையில் காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

இவ்வாறானவொரு நிலையில் அப்பகுதியில் உள்ள வீடுகளில் வசித்து வந்த 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தீயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 30 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டிருப்பதாக தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மின்சாரம் இல்லாமல் இருளில் தவித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 2 பேர் உடல் கருகி உயிரிழந்திருப்பதாகவும், மேலும் பலர் படுகாயமடைந்திருப்பதாகவும் உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles