33 பிணைக்கைதிகளை விடுவிக்க தயாராகும் ஹமாஸ்

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்டு டிரம்ப் வருகிற திங்கட்கிழமை அதிபராக பதவி ஏற்க உள்ளார்.

அதற்கு முன் வருகிற பேச்சுவார்த்தை வெற்றியடைந்து இஸ்ரேல்- காசா இடையில் போர் நிறுத்தம் ஏற்படும் எனவும், ஹமாஸ் 33 பிணைக்கைதிகளை விடுதலை செய்ய தயாராக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி நடத்திய தாக்குதலில் பிணைக்கைதியாக பிடிக்கப்பட்டவர்களில் இன்னும் 94 பேர் ஹமாஸ் மற்றும் அதன் கூட்டாளிகள் வசம் உள்ளனர். இதில் சுமார் 34 பேர் உயிரிழந்திருக்கலாம் என இஸ்ரேலால் நம்பப்படுகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்டு டிரம்ப் “வருகிற 20-ந்தேதி அதிபராக பதவி ஏற்பதற்குள் போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவடையும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles