சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவது எப்போது?

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கடந்த வருடம் ஆய்வு பணிக்காக சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் ஆகியோர் சென்றிருந்தனர்.

ஒரு வார காலம் தங்கியிருந்து ஆய்வு பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருவரும் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 7 ஆம் திகதி ஸ்டார்லைனர் விண்கலம் வெறுமையாக பூமிக்கு திரும்பியது.

இந்தநிலையில் கடந்த 9 மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் நாளை (18) பூமிக்கு திரும்புவர் என்று நாசா அறிவித்துள்ளது.

நேற்று அதிகாலை சர்வதேச விண்வெளி நிலையத்தில் வெற்றிகரமாக இணைந்த ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோருடன் மற்றொரு அமெரிக்க விண்வெளி வீரர், ரஷ்ய விண்வெளி வீரர் ஆகியோரும் பூமிக்கு திரும்பவுள்ளனர்.

இந்தநிலையில், நாசா வெளியிட்டுள்ள அறிக்கையின் படி விண்வெளி குறித்த விண்வெளி வீரர்கள் அந்நாட்டு நேரப்படி நாளை மாலை 5.57 க்கு ஃபுளோரிடா கடற்பகுதி அருகே தரையிறங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles