பிரான்ஸில் வாள்வெட்டு : கனடாவில் இருந்து நாடு கடத்தப்படும் யாழ் தமிழர்…!

பிரான்ஸ் மற்றும் யாழ்ப்பாணத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட ஆவா கும்பல் தலைவன் என கூறப்படும் நல்லலிங்கம் பிரசன்னாவை, கனடாவில் இருந்து பிரான்ஸூக்கு நாடு கடத்த ஒன்றாரியோ நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.

இலங்கையில் வாள்வெட்டு குற்றங்களில் ஈடுபட்ட குறித்த நபர், இலங்கையை விட்டு தப்பியோடி பிரான்ஸில் தஞ்சம் புகுந்தார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..,

யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா கும்பலின் தலைவன் என கூறப்படும் “பிரசன்னா நல்லலிங்கம்” என்ற அஜந்தன் சுப்பிரமணியம்’ என்பவர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் கனடாவின் டொராண்டோவில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இவர் 2021 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து தப்பிச் சென்று அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் கனடாவில் சட்டவிரோதமாக வசித்து வந்துள்ள நிலையில், அந்த நாட்டில் மனித கொலைகள் உட்பட பல குற்றங்களுக்காக அவர் தேடப்பட்டவர் என கூறப்படுகிறது.

2022 ஆம் ஆண்டு பிரான்சில் நடந்த ஒரு கொலை வழக்கில் சந்தேக நபரான இவர், கடந்த டிசம்பரில் டொராண்டோவில் கைது செய்யப்பட்டு, தற்போது தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, அந்த சம்பவம் தொடர்பாக ‘பிரசன்னா நல்லலிங்கம்’ என்ற இலங்கையரை பிரான்சுக்கு நாடு கடத்துமாறு கனடாவின் ஒன்ராறியோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles