காசாவிற்குள் வரையறுக்கப்பட்ட அளவிலான உணவை அனுமதித்த இஸ்ரேல்…!

காசாவிற்குள் வரையறுக்கப்பட்ட அளவிலான உணவை அனுமதிப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் காசாவில் பஞ்சத்துக்குக் காரணமான 11 வார முற்றுகை முடிவுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் தமது எல்லைக்குள் உள்ள அனைத்துப் பகுதிகளையும் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் எனவும், ஹமாஸ் அங்கு நுழையும் உதவிப் பொருட்களைக் கொள்ளையடிப்பதைத் தடுக்கும் என்றும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகிறார்.

கடுமையான உணவுப் பற்றாக்குறை பற்றிய அறிக்கைகளுக்குப் பிறகு, அந்தப் பகுதிக்கு உதவியை மீண்டும் தொடங்குவது குறித்து இஸ்ரேல் ஐக்கிய நாடுகள் சபையை அணுகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles