தொடக்க ஜோடி சரியாக அமையவில்லை: ஹேமங் பதானி

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தொடக்கத்தில் சிறப்பாக விளையாடியது.

முதல் 4 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றது.

முதல் 8 போட்டிகளில் 6-ல் வெற்றி பெற்றது. அதன்பின் 13 போட்டிகளில் ஒரு போட்டி மழையால் தடைபட்டது.

மற்ற போட்டிகளில் தோல்வியடைந்தது.

நேற்று வாழ்வா? சாவா? போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாததற்கு நிலையான தொடக்க ஜோடி அமையாதது காரணம் என அணியின் தலைமை பயிற்சியாளர் ஹேமங் பதானி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஹேமங் பதானி கூறுகையில் “தொடக்க ஜோடி அணிக்கு நல்ல தொடக்கம் கொடுக்கும்போதுதான், நிலையான தொடக்க ஜோடி என தீர்மானிப்பது சாத்தியமானதாகும்.

அப்படி தொடக்கம் கிடைக்கவில்லை என்றால், அந்த இடைவெளியை நிரப்ப, அந்த வெற்றிடத்தை நிரப்ப மாற்றங்களைச் செய்ய நீங்கள் கடமைப்பட்டுள்ளீர்கள்.

மற்ற அணிகளை பார்த்தீர்கள் என்றால், அவர்களுக்கு சிறந்த தொடக்கம் கிடைத்தது. பவர்பிளேயில் சிறப்பான ரன்கள் அடித்தனர்.

எங்களுக்கு அதுபோன்ற தொடக்கம் கிடைக்காததால், நாங்கள் இதுபோன்ற மாற்றங்களை செய்தோம்.

சீசன் தொடக்கத்தில் மெக்கர்க்கை தொடக்க வீரராக களம் இறக்கினோம்.

அவர் சரியாக விளையாடவில்லை.

அதன்பின் பொரேல், டு பிளிஸ்சிஸ், கருண் நாயர் என கொண்டு வந்தோம். எங்களுக்கு நல்ல தொடக்கம் கொடுக்கும் யாரும் எங்களிடம் இல்லை என்பதுதான் உண்மை.

எங்களுடைய ஓபனிங் ஜோடி கவலை அளிக்கும் விதமாக இருந்தது. தொடரில் நாங்கள் முன்னேறி பிளேஆஃப் சுற்றுக்கு செல்ல முடியாததற்கு இது ஒரு முக்கிய காரணம்” என்றார்.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles