Monday, February 2, 2026
HomeSportsஎலிமினேட்டர் போட்டியில் மும்பை - குஜராத் அணிகள் மோதல்

எலிமினேட்டர் போட்டியில் மும்பை – குஜராத் அணிகள் மோதல்

நடப்பு ஐ.பி.எல். தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்தன. லீக் போட்டிகளின் முடிவில் பிளே ஆப் சுற்றுக்கு பஞ்சாப், பெங்களூரு, குஜராத், மும்பை ஆகிய அணிகள் தகுதி பெற்றன.

சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, டெல்லி ஆகிய அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.

இந்நிலையில், புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த பஞ்சாப், 2வது இடம் பிடித்த ஆர்சிபி அணியுடன் குவாலிபையர் 1 சுற்றில் நாளை மோதுகிறது.

புள்ளிப்பட்டியலில் 3 ஆம் இடம் பிடித்த குஜராத், 4 ஆம் இடம்பிடித்த மும்பை அணியுடன் எலிமினேட்டர் போட்டியில் வரும் வெள்ளிக்கிழமை (மே 30) மோதுகிறது.

குவாலிபையர் 1 மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் பஞ்சாப்பின் முல்லன்பூரில் நடைபெறுகிறது.

குவாலிபையர்2 சுற்று மற்றும் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நடைபெறுகிறது.

முல்லான்பூரில் நடைபெற உள்ள எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணி குவாலிபையர் 1ல் தோல்வி அடையும் அணியுடன் ஜூன் 1 ஆம் தேதி விளையாடும்

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular