அமெரிக்காவின் கோரிக்கைகள் நியாயமற்றவை – ஈரான் தெரிவிப்பு

அமெரிக்கா முன்வைத்த நியாயமற்ற கோரிக்கைகளே பேச்சுவார்த்தையின் முன்னெடுப்பை தடுத்தன என ஈரான் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான இடைக்கால போர் நிறுத்தம் கடந்த 07ஆம் திகதி முதல் தொடங்கியது. இந்நிலையில், நிரந்தர போர் நிறுத்தம் தொடர்பிலான பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் நடைபெற்றது.

அதன்படி, நேற்று சனிக்கிழமை அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் தலைமையிலான அமெரிக்க பிரதிநிதிகள் மற்றும் ஈரான் பிரதிநிதிகள் இடையே நேரடி பேச்சுவார்த்தை தொடங்கியது.

21 மணித்தியாலம் நீடித்த இந்த பேச்சுவார்த்தை இறுதியில் உடன்பாட்டை எட்டவில்லை.

இததொடர்பில், ‘ஈரான் மக்களின் தேசிய நலனை கருத்தில் கொண்டு ஈரான் பிரதிநிதிகள் தொடர்ந்து 21 மணி நேரம் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அமெரிக்காவின் நியாயமற்ற கோரிக்கைகள் பேச்சுவார்த்தையின் முன்னெடுப்பை தடுத்தன’ எனக் கூறியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles