Monday, February 2, 2026
HomeMain NewsMiddle Eastஉக்ரைனுக்கு பதிலடி கொடுத்த ரஷ்யா – ஐவர் பலி !

உக்ரைனுக்கு பதிலடி கொடுத்த ரஷ்யா – ஐவர் பலி !

கிழக்கு உக்ரைன் முழுவதும் பல்வேறு பகுதிகளில், ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் பொதுமக்கள் 5 பேர் கொல்லப்பட்டனர்.

ரஷ்யா மீது உக்ரைன் நேற்று முன்தினம் (1) நடத்திய ட்ரோன் தாக்குதல், உலக நாடுகளை மிரள வைத்துள்ளது.

இந்த தாக்குதலில், 40 ரஷ்ய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. இதனால் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கிழக்கு உக்ரைன் முழுவதும் பல்வேறு பகுதிகளில், ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியது.

உக்ரைனில் டொனெட்ஸக் மற்றும் கார்கிவ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் பொதுமக்கள் 5 பேர் கொல்லப்பட்டதோடு மேலும் 5 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர் .

மேலும் உக்ரைனுக்கு மிகப் பயங்கரமான பதிலடி தருவதற்கு ரஷ்யா தயாராகி வருகிறது. இதனால் மேற்கத்திய நாடுகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular