பிரித்தானியாவில் பிரபல தொழிற்சாலை வளாகத்தில் இரசாயண கசிவு

பிரித்தானியாவில் மகெராலின் அருகே உள்ள தொழிற்சாலை வளாகத்தில் இரசாயண கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து 05 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 17 பேருக்கு உடனடி சிகிச்சை வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு அயர்லாந்து தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை (NIFRS) வெள்ளிக்கிழமை இரவு 10.23 மணிக்கு தங்களுக்கு ஒரு அழைப்பு வந்ததாக அவசர சேவைகள் தெரிவித்துள்ளன.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்பு படையினர் 17 பேரை மீட்டுள்ளதுடன், அவர்களுக்கு அவசர சிகிச்சையும் அளித்துள்ளன.

மேலும் இரசாயண கசிவிற்கான காரணம் தெரியவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles