Monday, February 2, 2026
HomeCinema"பறந்து போ" படத்தில் சித்தார்த் பாடிய பாடல் வெளியானது

“பறந்து போ” படத்தில் சித்தார்த் பாடிய பாடல் வெளியானது

கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம்.

இவர் தற்போது ‘பறந்து போ’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இதில், மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடிக்கிறார்.

மேலும், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மலையாள நடிகரான அஜு வர்கீஸ் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.

இப்படத்திற்கு, சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். யுவன் பின்னணி இசையமைத்துள்ளார்.

இப்படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் முதல் பாடலான சன்ஃப்ளவர் கடந்த மாதம் வெளியானது.

டீசர் கடந்த 4 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் நடிகர் சித்தார்த் “டாடி ரொம்ப பாவம்” என்ற பாடலை பாடியுள்ளார்.

இந்த பாடல் இன்று மாலை வெளியானது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular