Tuesday, February 3, 2026
HomeMain NewsIndiaஏர் இந்தியா விபத்துக்குப்பிற்கு 11A விமான இருக்கை மீது அதிகரிக்கும் ஆர்வம்

ஏர் இந்தியா விபத்துக்குப்பிற்கு 11A விமான இருக்கை மீது அதிகரிக்கும் ஆர்வம்

ஏர் இந்தியா விமான விபத்தை தொடர்ந்து 11A அதிர்ஷ்ட இருக்கையாகக் கருதப்படுவதாக பயணிகளின் ஆர்வம் அதிகரித்துள்ளத.

பயணி விஸ்வாஷ் குமார் ரமேஷ், விபத்திலிருந்து தப்பிக்க ஒரு சில காரணங்கள் இருந்தும் அவர் அமர்ந்திருந்த இருக்கையே பிரதானமானது என்ற கருத்து பயணிகளிடையே நிலவுகிறது.

முன்னர், பெட்டிகளை வைக்க இடமில்லை என்றும் இருக்கையைச் சற்று பின்னோக்கிச் சாய்க்க முடியாது என்றும் பயணிகள் அந்த இருக்கையைத் தவிர்த்தனர்.

தற்போது சிலர் அவசர வழிக்கு அருகில் அமர விரும்பினாலும், சிலர் 11A என்ற எண்ணை மட்டும் மனத்தில் கொண்டு இருக்கையைத் தேர்வு செய்வதாக SCMP செய்தி கூறுகிறது.

இருக்கை எண் முக்கியமில்லை, விமானத்தில் அது இருக்கும் இடமே முக்கியம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

அவசர வழிக்கு அருகே அமர்ந்திருப்பவர்கள் இத்தகைய விபத்தில் இருந்து தப்ப ஓரளவு வாய்ப்புள்ளது என்று எட் கேலெயா எனும் நிபுணர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular