Monday, February 2, 2026
HomeMain NewsMiddle Eastதெஹ்ரானிலிருந்து வெளியேறும் ஆயிரக்கணக்கான மக்கள்

தெஹ்ரானிலிருந்து வெளியேறும் ஆயிரக்கணக்கான மக்கள்

இஸ்ரேல் – ஈரான் மோதல் தீவிரமடையும் நிலையில் ஈரான் தலைநகரிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேறியுள்ளனர்.

மக்கள் தலைநகரை விட்டுச் செல்லவேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் கூறியதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

ஈரானின் அணுவாற்றல் தளங்களைத் தாக்க இஸ்ரேலுடன் இணைந்துகொள்வது குறித்து டிரம்ப் பரிசீலிப்பதாகத் தகவல் அறிந்த ஒரு வட்டாரம் தெரிவித்தது.

தெஹ்ரான் நிபந்தனையின்றிச் சரணடையவேண்டும் என்று திரு டிரம்ப் கூறியதும் இஸ்ரேலும் ஈரானும் ஒன்றன் மீது ஒன்று புதிய ஏவுகணைத் தாக்குதலை நடத்தின.

தெஹ்ரானின் தென்மேற்குப் பகுதியில் உள்ள ஈரானிய ராணுவத் தளங்களைத் தாக்கப்போவதாகக் கூறிய இஸ்ரேல், அங்குள்ள குடியிருப்பாளர்களை வெளியேறும்படி கேட்டுக்கொண்டது.

ஈரானின் வடக்குப் பகுதியை நோக்கிய போக்குவரத்து அதிகமாக இருந்ததாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்தன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular