ஜெய்ஸ்வால், கில் சதம் – முதல் நாளில் இந்திய அணி வலுவான இடத்தில்

ஷுப்​மன் கில் தலை​மையி​லான இந்​திய கிரிக்​கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடு​வதற்​காக இங்​கிலாந்​தில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்டுள்​ளது. இரு அணி​கள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஹெட்​டிங்​லி​யில் உள்ள லீட்ஸ் மைதானத்​தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்​கிலாந்து அணி​யின் கேப்​டன் பென் ஸ்டோக்ஸ் பீல்​டிங்கை தேர்வு செய்​தார்.

இந்​திய அணி​யின் இடது கை பேட்​ஸ்​மே​னான தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்​சன் அறி​முக வீரராக இடம் பெற்​றார். இதே​போன்று 8 வருடங்​களுக்கு பிறகு கருண் நாயரும் அணிக்கு திரும்​பி​னார். வேகப்​பந்து வீச்சு ஆல்​ர​வுண்​ட​ராக ஷர்​துல் தாக்​குரும், சுழற்​பந்து வீச்சு ஆல்​ர​வுண்​ட​ராக ரவீந்​திர ஜடேஜா​வும் இடம் பெற்​றனர். வேகப்​பந்து வீச்​சில் ஜஸ்​பிரீத் பும்​ரா​வுடன் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா களமிறங்​கி​னார்​கள். பேட்​டிங்கை தொடங்​கிய இந்​திய அணிக்கு யஷஸ்வி ஜெய்​ஸ்​வால், கே.எல்​.​ராகுல் ஜோடி நிதான​மான தொடக்​கம் கொடுத்​தது. இன்​ஸ்​விங், ஆஃப் ஸ்டெம்​பு​களுக்கு வெளியே வீசப்​பட்ட பந்​துகள், அவுட் ஸ்விங் என இங்​கிலாந்து வேகப்​பந்து வீச்​சாளர்​கள் தொடர்ச்​சி​யாக அழுத்​தம் கொடுக்க முயற்​சித்​தனர். ஆனால் ஜெய்​ஸ்​வால், கே.எல்​.​ராகுல் ஜோடி பொறுமை​யாக செயல்​பட்​டது.

ஆஃப் திசையை குறி​வைத்து இரு​வரும் சீராக ரன்​கள் சேர்த்​தனர். இந்த ஜோடியை பிரிக்க பென் ஸ்டோக்ஸ் பந்​து​வீச்​சில் பல்​வேறு மாற்​றங்​களை கொண்​டு​வந்​தார். ஆனால் ஜெய்​ஸ்​வாலும், கே.எல்​.​ராகுலும் எந்​த​வித வாய்ப்​பு​களை​யும் வழங்​காமல் அற்​புத​மாக விளை​யாடி ரன்​கள் சேர்த்​தனர். ஆனால் முதல் செஷன் முடி​யும் தரு​வா​யில் கே.எல்​.​ராகுல் தனது விக்​கெட்டை எளி​தாக பறி​கொடுத்​தார். பிரைடன் கார்ஸ் வைடாக வீசிய பந்தை கே.எல்​.​ராகுல் கவர் டிரைவ் விளை​யாட முயன்​றார். ஆனால் பந்து மட்டை விளிம்​பில் பட்டு முதல் சிலிப் திசையில் நின்ற ஜோ ரூட்​டிடம் கேட்ச் ஆனது. கே.எல்​.​ராகுல் 78 பந்​துகளில், 8 பவுண்​டரி​களு​டன் 42 ரன்​கள் சேர்த்​தார். முதல் விக்​கெட்​டுக்கு ஜெய்​ஸ்​வால், கே.எல்​.​ராகுல் ஜோடி 24.5 ஓவர்​களில் 91 ரன்​கள் குவித்​தது. இதன் பின்​னர் களமிறங்​கிய அறி​முக வீர​ரான சாய் சுதர்​சன் 4 பந்​துகளை சந்​தித்த நிலை​யில் ரன் ஏதும் எடுக்​காமல் ஆட்​டமிழந்து ஏமாற்​றம் அளித்​தார். பென் ஸ்டோக்ஸ் லெக் திசை​யில் வைடாக வீசிய பந்தை சாய் சுதர்​சன் தட்​டி​விட முயன்​றார். ஆனால் அதை விக்​கெட் கீப்​பர் ஜேமி ஸ்மித் அற்​புத​மாக கேட்ச் செய்​தார்.

மதிய உணவு இடைவேளை​யில் இந்​திய அணி 25.4 ஓவர்​களில் 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 92 ரன்​கள் எடுத்​தது. ஜெய்​ஸ்​வால் 42 ரன்​களு​டன் ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார். மதிய உணவு இடைவேளைக்கு பின்​னர் கேப்​டன் ஷுப்​மன் கில், ஜெய்​வாலுடன் இணைந்து ஆட்​டத்தை முன்​னெடுத்​துச் சென்​றார். இந்த ஜோடி வேகப்​பந்து வீச்​சில் விரை​வாக ரன்​கள் சேர்த்​தது. ஜோஷ் டங்க் வீசிய 41-வது ஓவரின் கடைசி பந்தை ஜெய்​ஸ்​வால் டீப் பாயின்ட் திசை​யில் சிக்​ஸர் விளாசி​னார். பிரைடன் கார்ஸ் வீசிய 59-வது ஓவரில் 3 பவுண்​டரி​களை விரட்டி அசத்​தி​னார் ஜெயஸ்​வால்.

மறு​புறம் கவர் டிரைவ், ஸ்டிரைட் டிரைவ் ஷாட்​களை அற்​புத​மாக விளை​யாடிய ஷுப்​மன் கில் 56 பந்​துகளில், 8பவுண்​டரி​களு​டன் தனது 8-வது அரை சதத்தை கடந்​தார். இங்​கிலாந்து பந்​து​வீச்​சாளர்​களுக்கு நெருக்​கடி கொடுத்த யஷஸ்வி ஜெய்​ஸ்​வால் 144 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 16 பவுண்​டரி​களு​டன் சதம் விளாசி​னார். இது அவரது 5-வது சதமாக அமைந்​தது. தேநீர் இடைவேளை​யில் இந்​திய அணி 51 ஓவர்​களில் 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 215 ரன்​கள் எடுத்​திருந்​தது. ஜெய்​ஸ்​வால்​ 100, ஷுப்​மன்​ கில்​ 58 ரன்​களு​டன்​ களத்​தில்​ இருந்​தனர்​.

தேநீர் இடைவேளைக்கு பின்​னர் ஆட்​டம் தொடர்ந்த நிலை​யில் ஜெய்​ஸ்​வால் 159 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 16 பவுண்​டரி​களு​டன் 101 ரன்​கள் எடுத்த நிலை​யில் பென் ஸ்டோக்ஸ் பந்​தில் போல்​டா​னார். 3-வது விக்​கெட்​டுக்கு ஜெய்​ஸ்​வால், ஷுப்​மன் கில் ஜோடி 129 ரன்​கள் சேர்த்​தது. இதையடுத்து களமிறங்கிய ரிஷப் பந்த் 102 பந்துகளில் 65 ரன்கல் எடுத்து களத்தில் உள்ளார். அதே நேரம் ஷுப்​மன் கில் சதம் அடித்து அசத்தினார்.

85 ஓவர்​கள் முடிவில் இந்​திய அணி 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 359 ரன்​கள் எடுத்​திருந்​தது. ஷுப்​மன் கில் 127 ரன்​களும், ரிஷப் பந்த் 65 ரன்​களும் சேர்த்து களத்​தில் உள்ளனர். இங்​கிலாந்து அணி தரப்​பில் பென் ஸ்டோக்ஸ் 2 விக்​கெட்​களை​யும், பிரைடன் கார்​ஸ் ஒரு விக்​கெட்​டை​யும் கைப்​பற்​றினர்​.

மவுன அஞ்சலி: இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போடடி தொடங்குவதற்கு முன்தாக இரு அணி வீரர்களும் அகமதாபாத் விமான விபத்தில் இறந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். மேலும் இரு அணி வீரர்களும் கையில் கருப்பு பட்டை அணிந்து போட்டியில் பங்கேற்றனர்.

சவால் விடுத்த ஜோடி: ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் ஜோடி முதல் செஷனில் அபாரமாக விளையாடியது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் வெளிப்புற விளிம்புகளைத் தூண்ட முயற்சி செய்து தோல்வியடைந்தனர். இந்த ஜோடி விளாசிய 16 பவுண்டரிகளும் ஆஃப் திசையில் அடிக்கப்பட்டிருந்தன. முதல் 114 நிமிடங்களில் இந்த ஜோடி இங்கிலாந்து அணிக்கு எந்தவித வாய்ப்பையும் வழங்கவில்லை.

‘முதல் இந்திய வீரர்’ – இங்கிலாந்தில் முதல்முறையாக விளையாடி வரும் ஜெய்ஸ்வால், ஹெட்டிங்லி டெஸ்டில் சதம் விளாசினார். இதற்கு முன்னர் ஆஸ்திரேலியாவிலும் முதல்முறையாக விளையாடிய போது அவர் சதம் விளாசியிருந்தார். இதன் மூலம் இந்த இரு நாடுகளிலும் பங்கேற்ற முதல் டெஸ்டிலேயே சதம் விளாசிய இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.

லெக் திசையில் 9 ரன்: ஜெய்ஸ்வால் சேர்த்த முதல் 100 ரன்களில் லெக் திசையில் 9 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். மற்ற 91 ரன்களையும் அவர், ஆஃப் திசையிலேயே எடுத்தார். தப்பித்த ஜெய்ஸ்வால்ஜெய்ஸ்வால் 45 ரன்களில் இருந்த போது பிரைடன் கார்ஸ் ஸ்டெம்பை குறிவைத்து வீசிய யார்க்கர் பந்து அவரது குதிகாலை தாக்கியது. ஆனால் இதை பிரைடன் கார்ஸ் நோ-பாலாக வீசியிருந்தார். இதனால் ஜெய்ஸ்வால் தப்பித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles