10 பெண்கள் பலாத்காரம் – சீன இளைஞனுக்கு இங்கிலாந்தில் ஆயுள் தண்டனை

சீனாவைச் சேர்ந்த ஜென்ஹாவோ ஜூ என்ற 28 வயது இளைஞனுக்கு, 10 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை விதித்து இலண்டன் கிரவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜென்ஹாவோ ஜூ என்ற 28 வயது இளைஞன் இலண்டனில் தங்கி உயர்கல்வி பயின்று வருகிறார். அவர் இணைய செயலி மூலம் பல பெண்களிடம் பழகி அவர்களில் சிலரை மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து, பொலிஸார் ஜென்ஹாவோவை கைது செய்ததுடன், இதுதொடர்பான வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்த வழக்கு விசாரணையில், இதேபோல் அவர் 10 பெண்களை ஏமாற்றி பலாத்காரம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டதுடன், இந்த வழக்கில் ஜென்ஹாவோவை குற்றவாளி என நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் தீர்ப்பளித்தது.

இந்த வழக்கில் மேலும் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. பொலிஸார் வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட 24 பெண்கள் வாக்குமூலம் அளிக்க முன்வந்துள்ளனர்.

இந்த நிலையில், அவர் குறைந்தபட்சம் 24 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். அதோடு, அவர் மீது புகார் தெரிவித்த 24 பெண்களின் வாக்குமூலங்கள் அனைத்தும் முறையாக விசாரிக்கப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் கூறியுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles