மெக்சிகோவை உலுக்கிய துப்பாக்கிச்சூடு – 12 பேர் பலி – 20 படுகாயம்

மெக்சிகோவின் குவானாஜுவாடோ பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

கிறிஸ்துவ மத நிகழ்ச்சியின் போது கூட்டத்தினர் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலியாகினர்.

அப்பகுதியில் ஒரு கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு நடந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணம் இரபுவாடோ நகரில் கிறிஸ்தவ மத நிகழ்ச்சியில் மக்கள் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் புனித யோவான் பாப்டிஸ்டைக் கொண்டாடும் விதமாக மது அருந்திக் கொண்டு தெருவில் நடனமாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

சுமார் 20 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மெக்சிகன் பாதுகாப்புப் படையினர் மேலும் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles