Monday, February 2, 2026
HomeSportsமேற்கிந்திய தீவுகள் அணி வீரருக்கு அபராதம்...!

மேற்கிந்திய தீவுகள் அணி வீரருக்கு அபராதம்…!

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான, சர்வதேச கிரிக்கட் பேரவையின் உலக டெஸ்ட் செம்பியன்சிப் தொடரின் முதல் போட்டியின் ஆரம்ப நாளில், மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சர்வதேச கிரிக்கட் பேரவையின் நடத்தை விதிகளின் நிலை 1 ஐ மீறியதற்காக, மேற்கிந்திய தீவுகளின் வேகப்பந்து வீச்சாளர் ஜெய்டன் சீல்ஸிக்கு (Jayden Seales) போட்டிக் கட்டணத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச போட்டியின் போது, துடுப்பாட்ட வீரர் ஒருவர் ஆட்டமிழந்தவுடன், அவரை இழிவுபடுத்தும் அல்லது ஆக்ரோசமாக எழுப்பப்படும் மொழி, செயல்கள் அல்லது சைகைகளைப் பயன்படுத்துதல் தொடர்பான விதிகளின்படியே, இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் இன்னிங்ஸின்போது, சீல்ஸ், அந்த அணியின் தலைவர் பெட் கம்மின்ஸை (pat cummins) வெளியேற்றிய பின்னர், வீரர்களின் ஓய்வு அறையை நோக்கி சைகை செய்து, கிரிக்கட் பேரவையின் விதிகளை மீறியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular