Monday, February 2, 2026
HomeMain NewsOther Countryஷேக் ஹசீனாவுக்கு ஆறு மாத சிறைத் தண்டனை...!

ஷேக் ஹசீனாவுக்கு ஆறு மாத சிறைத் தண்டனை…!

பங்களாதேஸ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு ஆறு மாத சிறைத் தண்டனை விதித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பங்களாதேஸில் மாணவர்கள் போராட்டம் காரணமாக பிரதமர் பதவியிலிருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார்.

அவர் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன.

அந்த வழக்குகளில் அவர் முன்னிலையாக வேண்டும் என நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்துள்ளன.

இதேவேளை, அவரை நாடு கடத்தும்படி முகமது யூனுஷ் தலைமையிலான இடைக்கால அரசு, இந்திய மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.

இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு ஆறு மாத சிறைத் தண்டனை வழங்கி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பிரதமர் பதவியிலிருந்து ஹசீனா பதவி விலகி, 11 மாதங்கள் முடிந்த நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட முதல் தண்டனை இதுவாகும்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular