இந்தியா- ரஷியா இடையிலான நீண்டகால கூட்டாண்மை குறித்து நிர்மலா சீதாராமன் விவாதம்

பிரதமர் நரேந்திர மோடி கானா, டிரினிடாட் அண்டு டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

கானா, டிரினிடாட் அண்டு டொபாகோ மற்றும் அர்ஜென்டினா நாடுகளின் பயணத்தை முடித்துக்கொண்டு பிரேசில் நாட்டிற்கு பிரதமர் மோடி சென்றார்.

இன்று மற்றும் நாளை பிரேசிலில் நடக்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று உள்ளார்.

மேலும், இந்த மாநாட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.

அப்போது, மாநாட்டின் ஒரு பகுதியாக ரஷியா, சீனா மற்றும் பிரேசில் நிதி அமைச்சர்களுடனும், இந்தோனேசியாவின் துணை நிதி அமைச்சருடனும் நிர்மலா சீதாராமன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ரஷிய நிதி அமைச்சர் அன்டன் சிலுவானோவ் உடனான சந்திப்பின்போது, “பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு ரஷிய அதிபர் புதின் இந்தியாவிற்கு அளித்த ஆதரவிற்கு நன்றி” என தெரிவித்தார். அப்போது, இந்தியா- ரஷியா இடையிலான நீண்டகால கூட்டாண்மை குறித்து விவாதித்தனர்.

இதேபோல் சீன நிதி அமைச்சர் லான் போனுடன் இந்தியா-சீனா இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து அவர் விவாதித்தார்.

மேலும், இந்தோனேசியாவின் துணை நிதி அமைச்சர் தாமஸ் ஜிவாண்டோனோ மற்றும் பிரேசில் நிதி அமைச்சர் பெர்னாண்டோ ஹடாட் ஆகியோரையும் நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசினார்.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles